தற்போது செஞ்சேரிமலை என்று அழைக்கப்படுகிறது. பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
முருகப்பெருமான் ஆறுமுகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி தருகின்றான். சிறிய குன்றின் மேல் கோயில் உள்ளது. தல விருட்சம் கருநொச்சி மரம். தைப்பூசத் தேர்த்திருவிழாவும், கந்தர் சஷ்டி விழாவும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. |